திருப்பூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் பி.என் ரோடு சாலையில் நடைபெற்றது.
இதில் வங்கித் துறையில் வாரத்தில் 5 நாள் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும். வங்கிகளில் தேவையான அளவு பணியாளர்களை நியமனம் செய்ய வலியுறுத்தியும், தற்காலிக வங்கிப் பணியாளர்களை நிரந்தர படுத்த வேண்டும்.
வருமான வரி விலக்குடன், அரசு ஊழியர்களுக்கான திட்டப்படி உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த, பணிக்கொடைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி திருப்பூர் பி. என் ரோடு புஷ்பா பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள கனரா வங்கி கிளை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.