திருப்பூரில் பேராசிரியா் அன்பழகன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
பேராசிரியா் அன்பழகனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள அண்ணா, பொியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மத்திய மாவட்ட பொறுப்பாளா், செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதில் தெற்கு மாநகர செயலாளா் டி.கே.டி.மு.நாகராஜன் மற்றும் பகுதி செயலாளா் மேங்கோ பழனிச்சாமி, மாநில மகளிரணி பிரசார குழு செயலாளா் உமா மகேஸ்வரி மற்றும் தெற்கு மாநகர இளைஞரணி அமைப்பாளா் எம்.எஸ்.ஆர்.ராஜ் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.