கேஜி கண்டிகை அடுத்த மகன் களிகாபுரம் பகுதியில் இருந்து 50 மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு திருத்தணி நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது

அப்போது திருத்தணியில் இருந்து கேஜி கண்டிகை அருகே உள்ள குவாரிக்கு எம் சென்ட் ஏற்றி வர சென்ற டிப்பர் லாரி அரசு பேருந்து மீது மோதிய விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

காயமடைந்த 20க்கும் மேற்பட்டவர்களை அப்பகுதி கிராம மக்கள் விரைந்து வந்து பேருந்தில் இருந்து மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்

சம்பவம் நடந்த இடத்திற்கு ஆறு ஆம்புலன்ஸ்கள் விரைந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றன

திருத்தணி அரசு மருத்துவமனைக்கும் கேஜி கண்டிகை அருகில் உள்ள பீரகுப்பம் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்கின்றன

அதில் சிலர் படுகாயமடைந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

விபத்தால் திருத்தணி கேஜி கண்டிகை இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது