நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சண்முகராஜ் என்பவர் கோவையில் இருந்து நாமக்கல் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

பல்லடம் அருகே மாதப்பூர் என்ற இடத்தில் வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மைய தடுப்பில் மோதி மறுபுறம் பொங்கலூரில் இருந்து கோவை நோக்கி சென்ற மருத்துவர் பானுப்பிரியா என்பவரின் கார் மீது பறந்து சென்று விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் சண்முகராஜன் கார் தலைக்குப்புற கவிழ்ந்தது. விபத்தில் சிக்கிய சண்முகராஜ், மருத்துவர் பானுப்பிரியா மற்றும் அவரது ஓட்டுநர் ஆகிய மூன்று பேரையும் வாகன ஓட்டிகள் காரில் இருந்து மீட்டனர்.

மூன்று பேரையும் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.

அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.