திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் நோக்கி, கணபதிபாளையத்திலிருந்து மினிபஸ் வந்து கொண்டிருந்தது. மினிபஸ்சை ஜெயச்சந்திரன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். மினிபஸ் பல்லடம் சாலை, தென்னம்பாளையம் பகுதியில் வந்த கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மினிபஸ் முன்னாள் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதி பின் அருகில் இருந்த கம்பெனி சுவர் மீது மோதிநின்றது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் தெற்கு போலீசார் வாகனங்கள் மற்றும் போக்குவரத்தை சரி செய்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மினிபஸ் ஓட்டுநர் ஜெயச்சந்திரனை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்தது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த வலிப்பு உடல்நலக்குறைவால் ஏற்பட்டதா? அல்லது மது போதையின் காரணமாக ஏற்பட்டதா என்பதை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.