கோவை ஓணாப்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் இன்று அதிகாலை ஆடுகளை கொன்று கவ்வி சென்ற சிறுத்தை .

கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்
கோவை வடவள்ளி அடுத்த சிறுவாணி சாலை ஓணாப்பாளையம் பகுதியில் விவசாயம் செய்து வருபவர் வெண்ணிலா (57). 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள தோட்டத்தில் ஆடுகள் 8 ஆடுகளை பட்டியில் கட்டி வளர்த்து வந்து உள்ளார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் அருகே உள்ள வனப்பகுததியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை தோட்டத்தில் கட்டி இருந்த ஆடுகளை ஒவ்வொன்றாக கழுத்தை கவ்வி பிடித்து வேட்டையாடி உள்ளது. இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் தோட்டத்திற்கு வந்த வெண்ணிலா,ஆடுகள் இரத்த வெள்ளித்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வளர்த்து வந்த 8 ஆடுகளில் 4 ஆடுகளை சிறுத்தை கொன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் தோட்டத்தில் வைத்து இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சிறுத்தை தோட்டத்தில் புகுந்து ஆடுகளை வேட்டையாடிதும், அதில் ஒரு ஆட்டை கவ்வி சென்றதும் தெரிய வந்துள்ளது.


நேற்று தொண்டாமுத்தூர் பகுதியில் ஆடுகளை சிறுத்தை வேட்டையாடிய நிலையில் இன்று ஓணாப்பளையம் பகுதியில் ஆடுகளை சிறுத்தை வேட்டையாடிய சம்பவம் குறித்து பகுதியில் விவசாயிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆடுகளை சிறுத்தை கொன்று பகுதியில் உடனடியாக கூண்டுகள் வைத்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.