விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தழுதாளி பெட்ரோல் பங்க் அருகே போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், புதுச்சேரியில் இருந்து மூன்று பைகளில் மதுபானங்கள் எடுத்து செல்வது தெரிய வந்தது.

மேலும் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில்
அந்த நபர், திருவள்ளூர் மாவட்டம், புத்தகரம் தாலுகா புதிய லட்சுமிபுரத்தை சேர்ந்த கலிய பெருமாள் என்பவரின் மகன் செல்வா (47) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து புதுச்சேரி மாநில மதுபானங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

பிடிபட்ட மதுபானத்தின் மதிப்பு சுமார் ரூபாய் 50 ஆயிரம் என தெரிய வந்தது. வாகன தணிக்கையில் சிறப்பாக பணி செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.