பெரம்பலூர் ஆலம்பாடி சாலையில் வேல்முருகன் என்பவர் சொந்தமாக தான் கட்டி வரும், புதிய வீட்டிற்கு வரி ரசீது போட தனது வீட்டின் கட்டுமாண ஒப்பந்ததாரர் சுபாஷ் சந்திர போஸ் என்பவர் மூலம் நகராட்சி நிர்வாகத்தை அனுகி யுள்ளார். சுபாஸ் சந்திர போஸ் நகராட்சி வரிவசூல் பிரிவில் தொடர்பு கொண்ட
போது அவரிடம் வரிவசூலிப்பாளர்.
லஞ்சம் கேட்டதாக தெரிகிறது இதையடுத்து சுபாஸ் சந்திர போஸ் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து மாவட்ட ஊழல் தடுப்பு பிரிசுடிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் பழைய நகராட்சி அலுவலகத்தில் மறைந்திரு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நகராட்சி வரி வசூலிப்பாளர் சிவகுமாரையும் அவரது உதவியாளரான ராமன் என்பவரையும் கையும் களவுமாக கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
