
குமரி கடல் பகுதிகள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு இன்று “சஜாக்” ஆப்ரேஷன் என்ற பெயரில் கடலோர பாதுகாப்பு குழும போலிஸார் பாதுகாப்பு ஒத்திகையை இன்று காலை 7.00 முதல் ஆரம்பித்து மாலை 6.00 மணி வரை நடத்துகிறார்கள். இதில் குமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதியில் அதி நவீன ரோந்து படகில் தொலைநோக்கி கருவிகள் மூலம் கடல் பகுதியில் ரோந்து வருகிறார்கள். மேலும் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் சந்தேகம்படும் படியாக நபர்கள் அல்லது படகுகள் காணப்பட்டால் கடலோர பாதுகாப்பு குழும போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய கடல் பகுதி வழியாக நாட்டிற்குள் தீவிரவாதிகளை ஊடுருவலை தடுக்கும் விதமாக ஆப்ரேஷன் சாகர் காவாச் சீ விஜில் சஜாக் என்ற பல்வேறு பெயர்களில் பாதுகாப்பு ஒத்திகைகளை தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலிஸார் நடத்தி வருகிறார்கள்.அந்த வகையில் குமரி கடல் பகுதிகள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு இன்று “சஜாக்” ஆப்ரேஷன் என்ற பெயரில் கடலோர பாதுகாப்பு குழும போலிஸார் பாதுகாப்பு ஒத்திகையை இன்று காலை 7.00 முதல் ஆரம்பித்தார்கள். இந்த பாதுகாப்பு ஒத்திகையை மாலை 6.00 மணி வரை நடத்துகிறார்கள்.இதில் குமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதியில் அதிநவீன ரோந்து படகில் தொலைநோக்கி கருவிகள் மூலம் கடல் பகுதியில் ரோந்து வருகிறார்கள்.மேலும் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் சந்தேகம்படும் படியாக நபர்கள் அல்லது படகுகள் தென்பட்டால் கடலோர பாதுகாப்பு குழும போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கவும் மீனவர்களும் மீனவ கிராம மக்களுக்கும் கடலோர பாதுகாப்பு போலிஸாரால் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.