செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அதிமுக பேரூர் செயலாளர் மற்றும் அவரது உறவினர் தாக்கப்பட்டது கண்டித்து அதிமுகவினர் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால்,

அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகத்தை போலீசார் வீட்டில் வைத்து கைது செய்ய முயன்றதால் நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போலீசாரை கண்டித்து திருக்கழுக்குன்றம் மதுராந்தகம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். மேலும், திமுக அரசுக்கு எதிராகவும் மற்றும் போலீசாரை கண்டித்தும் அதிமுகவினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து, மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் மற்றும் அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்..