
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரில் மயான கொள்ளை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வரும் அமாவாசை மிகவும் பிரசித்திபெற்றது. இந்த மாசி அமாவாசை அங்காளம்மனுக்கு உகந்தது என்பதால் பக்தர்கள் அங்காளம்மன் வேடம்தரித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
மேலும், ஆடு கோழிகளை கடித்து ஆக்ரோஷமாக மேள தாளங்களுக்கு ஏற்றவாறு நடனமாடியும் தங்களது பக்தி பரவசத்தை வெளிப்படுத்தினர்.
திருக்கோவிலூர் ஏரிக்கரை அங்காளம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட அங்காளம்மன் ஊர்வலம் ஒரு மீட்டருக்கு அப்பாலுள்ள கீழையூர் தென்பெண்ணை ஆற்றங்கரையில் நிறைவடைந்தது.
முன்னதாக, இந்த மயான கொள்ளை திருவிழாவில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 1000-த்துக்கும் மேற்பட்டோர் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.