மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கரட்டுப்பட்டி பிரிவு எனுமிடத்தில் செயல்பட்டு வரும் தனியார் கயிறு தொழிற்சாலைக்கு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து கயிறு திரிப்பதற்கான தென்னை நார் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது.இந்த லாரி கயிறு தொழிற்சாலை அருகே வரும்போது மின் கம்பியில் உரசியது, இதில் திடீரென லாரி தீப்பற்றி எரியத் துவங்கியது.
உடனடியாக லாரியின் ஓட்டுநர் லாரியினை அருகில் இருந்த காலி இடத்தில் நிறுத்திவிட்டு லேசான காயங்களுடன் தப்பினார், இருப்பினும் லாரி மளமளவென தீப்பற்றி எரிய துவங்கியது.
அதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த நிலக்கோட்டை மற்றும் சோழவந்தான் தீயணைப்பு மீட்பு படையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர், இருப்பினும் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது
