தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியில் சின்னதுரை என்பவர் பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வருகிறார் இங்கு நாட்டு வெடி மற்றும் ஏராளமான பட்டாசுகள் தயார் செய்யப்படுகிறது இன்று காலை நான்கு பேர் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்
மதிய வேளையில் ஒருவர் உணவருந்த சென்றிருந்த நிலையில் 3 பெண்கள் , பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசு இருந்த பகுதியில் தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதில் மூன்று பெண்களும் தூக்கி வீசப்பட்டு , உடல்கள் சிதறிய நிலையில் உயிரிழந்தனர்.
அதாவது திருமஞ்சு(34) , திருமலர்(37) , செண்பகம்(35) ஆகிய மூன்று பேரும் பட்டாசு வெடித்ததில் உடல் சிதறி உயிரிழந்தனர். இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.