மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பச்சைபெருமாள் நல்லூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான நெல் வயலில் அறுவடை செய்த வைக்கோல்களை டிராக்டரில் ஏற்றி கொண்டு வீட்டிற்கு சென்ற போது வயலில் குறுக்கே தாழ்வாக சென்ற மின்சார கம்பியில் உரசி தீ பற்றி வைக்கோல் எரிய தொடங்கியது,

உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைக்க முயன்றனர் தீ மளமளவென்று அதிகரித்ததால் இதுகுறித்து தகவலறிந்து வந்த சீர்காழி தீயணைப்பு துறை தீயை அனைத்து கட்டு படுத்தினர் மேலும் வைக்கோல் மற்றும் டிராக்டர் முற்றிலும் எரிந்து நாசமானது

இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்