
திருச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு சொகுசு பேருந்தில் 50 கும் மேற்பட்ட பயணிகள் திருப்பூர் நோக்கி வந்த நிலையில் பேருந்தானது வளர்மதி சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென பேருந்தினது பாதியிலேயே நின்றது இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகளை மாற்று பேருந்து மூலம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மற்றொரு அரசு பேருந்தில் கயிறு கட்டி பழுதான அரசு சொகுசு பேருந்தானது வளர்மதி சாலையில் இருந்து சி டி சி கார்னர் வரை 2 கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்படது.
இதன் காரணமாக இச்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது