திருப்பூர்..

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், அரசு ஊழியர் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என திமுக தேர்தல் வாக்குறுதியை அளித்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையிலும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி மாநில அளவிலான போராட்டத்தை ஜாக்டோ – ஜியோ அறிவித்திருந்தது.


அதனடிப்படையில் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் அடங்கிய குழுவை நியமித்த நிலையில் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.
இந்நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சுமார் 500க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.