மத்திய அரசு மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணித்து வருவதாக கூறி திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் ஆபீஸ் அலுவலகம் எதிரே மாணவர் இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசு மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணித்து வருவதாகவும்,தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய கல்வி நிதியை உடனடியாக தர வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஹிந்தி தெரியாது போடா, கெட் அவுட் மோடி என்ற பதாகைகளுடன் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக,காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், உள்ளிட்ட பல்வேறு கட்சி சார்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.