குமரி சுற்றுலா தலத்தில் காந்தி மண்டபம் அருகே அமைந்துள்ள மரண பாறையில் ஏறி செல்பி எடுத்த சுற்றுலா பயணியை கடல் அலை நேற்று இழுத்து சென்று அவர் மாயமான நிலையில் கடலில் விழுந்த சுற்றுலா பயணியை இரண்டாவது நாளாக தேடும் பணியில் கடலோர பாதுகாப்பு குழும போலிஸார் தீவிரமாக ஈடுப்பட்டனர்.
இந்நிலையில் காந்தி மண்டபத்தில் இருந்து கடலில் சுமார் 300 மீட்டர் தூரத்தில் சுற்றுலா பயணியின் உடலை கடலோர பாதுகாப்பு குழும போலிஸார் மீட்டு கோவளம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் உடற்கூர் ஆய்வுக்காக இறந்த சுற்றுலா பயணியின் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் நேற்று குமரிக்கு சுற்றுலா வந்தார்கள்.அவர்கள் குமரி சுற்றுலா தலத்தில் பல்வேறு பகுதிகளை பார்வையிட்ட பின்னர் கடற்கரையில் அமைந்துள்ள காந்தி மண்டபத்தையும் பார்வையிட்டார்கள்.
அப்பொழுது அந்த சுற்றுலா குழுவில் வந்த விஜய் (26) என்ற சுற்றுலா பயணி காந்தி மண்டபம் அருகே கடலில் அமைந்துள்ள மரண பாறைக்கு தடையை மீறி சென்றதோடு அப்பாறையில் நின்று செல்பி எடுத்து கொண்டு இருந்தார்.
அப்பொழுது எதிர்பாராமல் வந்த ஒரு பெரிய அலை ஒன்று விஜயை மரண பாறையில் இருந்து இழுத்து கடலுக்குள் சென்றது. இதில் விஜயை கடலுக்குள் மூழ்கி மாயமானர்.இது குறித்து விஜய் உடன் வந்த சுற்றுலா பயணிகள் கடலோர பாதுகாப்பு குழும போலிஸாருக்கு தகவல் கொடுத்தார்கள்.இதனை அடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலிஸார் நேற்று இரவு வரை கடலில் மாயமானவரை தேடும் பணியில் ஈடுப்பட்ட நிலையில் நேற்று இரவு வரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக கடலில் மாயமான சுற்றுலா பயணி விஜயை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில்காந்தி மண்டபத்தில் இருந்து கடலில் சுமார் 300 மீட்டர் தூரத்தில் சுற்றுலா பயணியின் உடலை கண்டெடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலிஸார் படகில் சென்று உடலை மீட்டு கோவளம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் உடற்கூர் ஆய்வுக்காக இறந்த சுற்றுலா பயணியின் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.