மனிதநேய ஜனநாயக கட்சியின் 10 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருப்பூர் யூனியன் மில் சாலையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராயல் ராஜா தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் திருப்பூர் தெற்கு திமுக எம்எல்ஏ க.செல்வராஜ் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராகவும் இந்தி திணிப்புக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பப்பட்டது பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் எழுந்து நின்று தங்களது தொலைபேசி விளக்குகளை ஒளிர விட்டு கோஷங்கள் எழுப்பினர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் பத்தாம் ஆண்டு துவக்க விழாவிற்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.