திருப்பூர் விஜயாபுரம் பகுதியில் உள்ள தனியார் திடலில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அமைப்பின் கொங்கு மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் அப்துல் கரீம் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த மாநாட்டில் ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அறியாமையை அகற்றி மார்க்கம் சொல்லும் வழிகளை கல்வியின் மூலம் பெற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த மாநாடு. ஒருமாநிலத்தின் கலாச்சாரத்தை அழிக்க மொழியை அழிக்க வேண்டும் ஆளுநர் பேசுவது கண்டிக்கத்தக்கது.
மும்மொழி திணிப்பு என்பது திட்டமிட்ட கலாச்சார அழிப்பு முயற்சி. சர்வாதிகார போக்காக இந்த செயலை தவ்ஹித் ஜமாஅத் பார்க்கிறது. மத்திய பாஜக அரசு ஆட்சி க்கு வந்த பிறகு மத வெறுப்பை உண்டாக்குகிறார்கள்.
நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படுகிறார்கள். திருப்பரங்குன்றம் விஷயத்தை பாஜக பிரச்சனையாக கொண்டு வந்து வெறுப்பை விதைப்பது ஏற்புடையதல்ல. இந்த மத வெறுப்பு பிரச்சாரத்தை தடை செய்ய வேண்டும். மூஸ்லீம் இட ஒதுக்கீடு 7 சதவீதமாக உயர்த்த வேண்டும். பள்ளி வாசல்களை நாங்கள் நிர்வகிக்க கூடாது என்பது சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமையை பாதிக்கிறது.
மறைமுகமாக இந்தி திணிக்கவே விருப்பப்பட்ட மொழிகளை கற்கலாம் என சொல்கின்றனர். ஆனால் இறுதியில் இந்தி திணிப்பே நடைபெறும். அண்ணாமலை கல்வி நிதியை பெற்று தந்து விட்டு பேசட்டும். தமிழகக்தை முன்னிறுத்தி பாஜக அரசியல் செய்வதில்லை. டெல்லி சார்ந்த கருத்து மட்டுமே திணிக்கப்படுகிறது. என தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.