மதுரை அருகே ஆலத்தூர் கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றதில் சுமார் 200 கர்ப்பிணி பெண்களுக்கு புத்தாடை மற்றும் பூ, மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட பொருட்களை தாய் வீட்டு சீதனமாக வழங்கி வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி சிறப்பித்தார்.

மேலும் விழாவில் பங்கேற்ற கர்ப்பிணி பெண்கள் மற்றும் உறவினர்களுக்கு 7 வகை வளைகாப்பு சாதமும் வழங்கப்பட்டது.கர்ப்பிணி பெண்களுடன் அமைச்சர் மற்றும் ஆட்சியர் சேர்ந்து உணவருந்தினார்கள்.