கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம் சாலை திருவள்ளுவர் நகரில் ஒருவரது இல்லத்திற்குள் சுமார் 6 அடி நீள சாரைப்பாம்பு வாசல் வழியாக புகுந்துள்ளது.

அதனை பார்த்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக வீட்டிற்கு வெளியே வந்து, வீட்டின் கதவை மூடிவிட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர், வீட்டை திறந்து பார்த்தபொழுது, அந்த பாம்பு சோபாவில் சுருண்டு படுத்து கிடந்துள்ளது. தொடர்ந்து பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்குள் விடுவிக்க எடுத்து சென்றனர்.