திருப்பூர் மாநகர காவல் துறை,மாநகர வடக்கு போக்குவரத்து காவல்துறை, திருப்பூர் ரோட்டரி மெட்டல் டவுன் மற்றும் சென்னை கூத்துப்பட்டறை இணைந்து சாலை விதிகளை கடைபிடிக்காமல் செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நாடகம் வடக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர்.

பாண்டியராஜன் தலைமையில் அவிநாசி சாலை புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நாடகத்தில் செல்போன் பேசிக்கொண்டு செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் , போக்குவரத்

து காவல்துறையின் சாலை விதிகளை பின்பற்றாமல் செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் உடலில் காயங்கள் ஏற்படுவது போன்று தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது.

சாலை விபத்துகளில் சிக்கி ஒருவர் உயிரிழப்பதன் காரணமாக ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்படுவது குறித்தும் நாடகமாக அரங்கேற்றப்பட்டது. மேலும் சாலை விபத்துக்களால் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் போல வேடம் அணிந்த ஒருவர் ஹெல்மெட் அணிவது குறித்தும் , கார்களில் சீட் பெல்ட் அணிய வேண்டும் , செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் , ஹெல்மெட் அணியாதவர்களின் காலில் விழுந்து ஹெல்மெட் அணிய வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற தத்ரூபமான நாடகத்தை சாலையில் சென்ற அனைவரும் நின்று கவனித்துச் சென்றனர். இந்த நிகழ்வில்
மாநகர காவல் துறை கூடுதல் காவல் துணை ஆணையர் மனோகரன்,வடக்கு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்.குருசாமி போக்குவரத்து காவலர்கள் மற்றும் ரோட்டரி மெட்டல் டவுன் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.