திருப்பூர் ஓ.பி.எஸ் அணி ஆதரவாளர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில் பாலியல் பிரச்சனைகள் குறித்து நீண்ட விளக்கமான என்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளேன் முதலமைச்சர் தன் கையில் வைத்துள்ள சட்டத்தை வைத்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக ஆகி உள்ளார்யார் கெட்டவுட்என்பதை இந்திய தேசிய மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
செங்கோட்டையன் அவர்கள் தனது இதயத்தில் உள்ள மன சுமையை வெளிப்படுத்தி உள்ளார்.அவருடைய வாதம் உணர்வுபூர்வமான வாதம்.செங்கோட்டையன் ஒரு மூத்த நிர்வாகி எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் இருந்து கழகத்தில் அனைத்து நடவடிக்கைகளும் அவர் பணியாற்றியுள்ளார் நானும் அவரும் அம்மா அவர்கள் சொன்ன அனைத்து பணிகளையும் இணைந்து பணியாற்றியுள்ளோம் .எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி கட்சிக்காக பணியாற்றக் கூடிய நல்ல மனிதர்.
அதிமுகவை தொண்டர்கள் இயக்கமாக உருவாக்கப்பட்டது.ஜெயலலிதா தொண்டர் இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றினர்.இதன் காரணமாக ஆண்ட கட்சியே மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்க உதவியது.கட்சி பிரிந்திருந்த நேரத்தில் மீண்டும் ஒன்றாக இணைந்த நேரத்தில் அவர்கள் தான் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்று உருவாக்கினார்கள் மீண்டும் அவர்கள் தான் ஒற்றை தலைமை வேண்டுமென்று பலவந்தமாக எதற்கு அதிகமாக கொண்டு வந்தார்.பழனிச்சாமியின்ஒற்றைத் தலைமையில் ஏற்ற அனைத்து தேர்தலுக்கும் தோல்வியை கண்டது.தொண்டர்கள் தற்பொழுது மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார்கள் இணைந்து செயல்பட்டால் உண்டு வாழ்வு என்ற செயல்பட்டில் உள்ளார்கள்.
அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா சட்டமன்றத்திலேயே இருமொழிக் கொள்கைதான் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள்புதிதாக எந்தவித பிரச்சனையும் எழுப்ப வேண்டாம் என அனைத்து தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.1965ல் மிகப்பெரிய மொழிப்போராட்டம் நடைபெற்ற பொழுது அதற்கு தீர்வு காணத்தான் மத்திய அரசு உறுதிமொழி தந்ததுதமிழக மக்கள் விரும்புகின்ற ஆங்கிலம் தான் பொது மொழியாக இருக்கும் என்று உறுதி மொழியை தரப்பட்டுள்ளது.இதுதொடர்ந்து நீடித்தால் தமிழக மக்களுக்குநல்லது கிடைக்கும்.மத்திய அரசு நிதி பரவலாக அனைத்து மாநிலங்களுக்கும் தரப்பட்டுள்ளது.
கடந்த நாதா நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் ஜனநாயக கூட்டணியை உருவாக்கி தனது வலது பக்கத்தில் பழனிச்சாமியை உட்கார வைத்தார் நான்கே நாட்களில் அவருக்கு என்னவென்று தெரியவில்லை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அனுபவத்திக் கொண்டிருக்கிறது.பேரறிஞர் அண்ணா காங்கிரசை பாராட்டி உள்ளார் .எம்ஜிஆரும் காங்கிரசை பாராட்டி உள்ளார் அதுபோல ஜெயலலிதாவும் சிதம்பரத்தை பாராட்டியுள்ளார்.நல்ல கருத்துக்களை சொல்பவர்களை பாராட்டுவதில் தப்பு இல்லை.படத்தில் சொல்வது போல ஜெயக்குமார் சிறப்பு அரசியல்வாதி என்று அவர் கூறினார்.