
தமிழ்நாடு மாநில விலங்கான “வரையாடு” அழியும் தருவாயில் உள்ளது. அதனை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு நீலகிரி தார் திட்டம் என்ற அமைப்பை உருவாக்கி வரையாடுகளை பாதுகாப்பது குறித்தான நடவடிக்கைகளை ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நீலகிரி தார் திட்டம் மற்றும் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அரும்புகள் தன்னார்வ அமைப்பினர் இணைந்து, தமிழ்நாடு முழுவதும் வரையாடு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதுவரை திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிலையில் தற்போது கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வரையாடு குறித்த நாடகம். பாடல் என தெருமுனை பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர். வரும் ஐந்து நாட்கள் நடைபெற உள்ள இந்த விழிப்புணர்வு பயணத்தை நீலகிரி தார் திட்டம் இயக்குனர் கணேசன் துவங்கி வைத்தார். கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் இந்த விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரங்கள் நடைபெற உள்ளது.
