
தஞ்சை கீழவீதியில் உள்ள நடராஜா ரெடிமேட் ஜவுளிக்கடையில் ஒரு மாடி கட்டிட மாநகராட்சியிடம் அனுமதி பெற்ற நிலையில் கூடுதலாக அனுமதியில்லாமல் 2 மாடிகளை கட்டியதால் சமூக ஆர்வலர் லெனின் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் அனுமதியின்று இரண்டு மாடி கட்டிடங்களை கூடுதலாக கட்டிய தஞ்சை நடராஜா ரெடிமேட்ஸ் ஜவுளி கடையை இடிக்க மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டு 72 மணிநேரம் கெடு விதித்திருந்த நிலையில். மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் ராட்சத கிரேன் இயந்திரங்களையும் வரவழைத்து.3 வது மாடியில் கழிவறையை உள்ளிட்ட அறைகளை இடிக்க துவங்கிய நிலையில்,
ஜவுளிக்கடை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தை இன்று அனுகியதையடுத்து. வரும் 24 தேதி வரை இடைக்கால தடை விதித்துள்ள உச்சநீதிமன்றம் அடுத்த விசாரணையை வரும் 24 ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
அதுவரை எந்த இடையூரும் கூடாது என்று கூறியதையடுத்து.மாநகராட்சி அலுவலர்கள் இடிக்கும் பணியை நிறுத்தினர் பொக்லைன் இயந்திரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன