குப்பையை தரம் பிரிக்கும் இயந்திரம் பற்றி எரிகிறது.
தீயை அணைக்கும் பணியில் கம்பம் நகர்மன்ற தலைவர் தீவிர நடவடிக்கை.
கம்பம் நகரில் உருவாகும் குப்பைகளை கம்பம் நகராட்சி நிர்வாகம் சேகரித்து கம்பம் கூடலூர் சாலையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் சேமிக்கப்பட்டு வருகிறது.பல ஆண்டுகளாக சேமிக்கப்பட்ட குப்பை மலை போல் உள்ளது. இந்த குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக். கண்ணாடி. பாலிதீன் பைகள் போன்ற மக்காத பொருட்கள் பிரித்து எடுக்கும் வகையில் பல லட்ச ரூபாய் மதிப்பில் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
குப்பை கிடங்கில் இருந்து தினமும் பல டன் குப்பைகள் பிரிக்கப்பட்டலும்,
பல ஆயிரம் டன் குப்பைகள் மழை போல் இன்னும் குவிந்திருக்கின்றது. இந்த நிலையில் இன்று மாலை திடீரென்று குப்பை கிடங்கில் தீ பிடித்து மளமள என்று
பரவி குப்பை கிடங்கும் முழுவதும் பற்றி எரிந்து வருகின்றது.மக்காத பிளாஸ்டிக் பாலிதீன் பைகள் குவியலில் பற்றி தீ பற்றி எரிந்து வருகின்றது.மக்கும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் இயந்திரமும் பற்றி எரிந்து வருகின்றது.இந்த தீ விபத்தில் அதிக அளவில் கரும்புகை உருவாகி அப்பகுதியில் பரவி வருகின்றது.கம்பம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்து வரும் செய்தி அறிந்த நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தீயணைப்பு துறையினர் மற்றும் நகராட்சி, தனியார் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்கும் முயற்சியினை தீவிர மேற்கொண்டு வருகின்றார்.