சட்டவிரோதமாக குடியேறியதாக கூறி இந்தியர்களை விமானம் மூலம் அமெரிக்கா நாடு கடத்தி வருகிறது. அப்போது கை, கால்களில் விலங்கிட்டு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு கண்டனம் தெரிவிக்காததை சுட்டிக்காட்டும் வகையில் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் கார்ட்டூன் ஒன்று வெளியிடப்பட்டது.
இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் குறித்து தரக்குறைவாக கார்ட்டூன் வெளியிட்டதாக கூறி திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளரான கே.ஆர்.வெங்கடேசன் தலைமையில் அக்கட்சியினர் ஆனந்த விகடன் புத்தகத்தை தீயிட்டு கொளுத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.