ஈரோட்டில் கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை உணவு வழங்கி ரசிகர்கள் கொண்டாட்டம்…..

ஈரோடு அகில்மேடு வீதியில் தேநீர் கடை நடத்தி வருபவர் குமார்.நடிகை சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகரான இவர் சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளை தொடந்து கொண்டாடி வருகிறார்.

இந்தநிலையில் சில்க் ஸ்மிதாவின் 65வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.இதனையொட்டி தனது தேநீர் கடையினை வண்ணமயமான பலூன்களை கொண்டு அலங்கரித்தார்.மேலும் சில்க் ஸ்மிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து ரசிகர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார்.

தொடர்ந்து 2025 ஆம் ஆண்டிற்கான சில்க் ஸ்மிதா படத்துடன் கூடிய காலண்டரையும் ரசிகர்களுக்கு வழங்கினார்.மேலும் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.இதேபோல் தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் உணவு வழங்கப்பட்டது.

கடந்த 21 ஆண்டுகளாக தேநீர் கடை நடத்தி வரும் தான் 13 ஆண்டுகளாக சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை கொண்டாடி வருவதாக தேநீர் கடை உரிமையாளர் குமார் தெரிவித்தார்.