
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூட்டடி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள நான்கு ஏக்கர் அரசு தோப்பு புறம்போக்கு இடத்தில் வீட்டு மனை இல்லாத 90 குடும்பத்தை சேர்ந்த கிராம மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பல்வேறு கட்ட போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கிராம பொதுமக்கள் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியுடன் இனைந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடை பயண போராட்டம் அறிவித்தனர்.
இன்று காலை கூட்டடி மாரியம்மன் கோயில் அருகில் இருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நோக்கி சென்ற பொது கிராம மக்கள் 30 பெண்கள் உள்ளிட்ட 80 பேரை திருநாவலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலா போலீசார் கைது செய்து சேந்தநாடு திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.
வீட்டுமனை பட்டா கேட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணம் போராட்டம் அறிவித்த கூட்டடி கிராமத்தை சேர்ந்த 80 பேரை கைது செய்யப்பட்ட சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.