வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுனர் கீழே இறங்கி ஓடிய நிலையில் பிக்கப் வாகனத்தில் இருந்த காய்கறி மூட்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து சாப்பிட்டு அட்டகாசம் செய்தது.

தமிழக – கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் பந்திப்பூர் தேசிய நெடுசாலையில் சென்று வரும் காய்கறி லாரிகளை சாமீப காலமாக காட்டு யானை ஒன்று வழிமறித்து காய்கறிகளை தும்பி கையால் எடுத்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. இதனால் அந்த சாலையில் காய்கறி மற்றும் உணவு பொருட்களை ஏற்றி சென்று வரும் லாரி ஓட்டுநர்கள் மிகுந்த அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.

இது போன்று லாரிகளை வழிமுறைப்பதால் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து பாதிக்கபடுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு கர்நாடக மாநிலத்திலிருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கூடலூரை நோக்கி வந்து கொண்டிருந்த பிக்கப் வாகனத்தை அந்த காட்டு யானை வழிமறித்தது. அதனைக் கண்டு அச்சமடைந்த ஓட்டுநர் பிக்கப் வாகனத்தை வனப்பகுதிக்குள் விட்டு திருப்பம் முயன்றார்.

ஆனால் அதற்குள் அந்த யானை அருகில் வந்ததைப் பார்த்த ஓட்டுநர் கீழே இறங்கி தப்பி ஓடினார். அந்த யானையும் வாகனத்தில் இருந்த காய்கறி மூட்டைகளை ஒன்றன்பின் ஒன்றாக துதிக்கையால் எடுத்து கீழே போட்டு சாப்பிட்டது. அதனை கண்ட சக வாகன ஓட்டிகள் சத்தம் எழுப்பிய போதும் அச்சப்படாமல் தொடர்ந்து வாகனத்தில் இருந்து காய்கறிகளை அந்த யானை சூறையாடியது. இந்த காட்சிகள் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வாகன ஓட்டுனர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது