அமைச்சரிடம் சரமாரி குற்றச்சாட்டு வைத்த செந்தில்குமார் மனைவி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலை கவுண்டம்பாளையம் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு செந்தில்குமார் தெய்வசிகாமணி அலமேலு ஆகியோர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டனர். இதில் தொடர்ந்து இப்பகுதியை சேர்ந்தவர்கள் எல்லாம் அவர்களது குடும்பத்தாரிடம் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ சுவாமிநாதன் திமுக அரசு சார்பாக ஆறுதல் தெரிவிக்க சென்றார், இதைத் தொடர்ந்து செந்தில்குமாரின் மனைவி அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி வைத்தார். அவர் முன்பாகவே உங்கள் ஆட்சியில் தான் இவ்வளவு நடக்கிறது என்று அவர் பேசியது அமைச்சருக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது.