இருபதாயிரம் லிட்டர் பால் சேதம் …
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் மலை பாதையில் உள்ளது. இன்று காலை தாளவாடியில் இருந்து புறப்பட்டு, சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்த பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று, ஒன்றாவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது, எதிர்பாராத விதமாக லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் டேங்கர் லாரி சேதமடைந்து, லாரியில் இருந்த பால் முழுவதும், சாலை எங்கும் கொட்டி, பரவலாக சென்றதால், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள், ஆங்காங்கே நிறுத்தினார்கள். பால் முழுவதும் கொட்டி சாலையில் வீனாகி, நீரூற்று போல் சென்றது. இந்த விபத்து காரணமாக சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்பொழுது டேங்கர் லாரியை அகற்றும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.