
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மேலாத்தூர் கிராமத்தில் பயிர்களை சேதப்படுத்தும் கோழி மற்றும் எலிகளை விரட்டும் நோக்கில் சின்னப்பா என்ற விவசாயி பூச்சிக்கொல்லி மருந்து கலந்த அரிசியை வயல்வெளியில் தூவிய நிலையில், அங்கே வந்த மூன்று ஆண்மையில் மற்றும் நான்கு பெண்மயில் என மொத்தம் 7 மயில்கள் அந்த அரிசியை உண்டு உயிரிழப்பு.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சின்னப்பாவை கைது செய்து அவர் மீது வன உயிரின சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்து அவரை வனத்துறை அலுவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.