திண்டுக்கல் மாவட்டம் குட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த அசோக் சந்திரசேகர் என்ற இருவரும் முன்விரோதம் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் தந்தையை கொலை செய்துள்ளனர். இந்த வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஜாமினில் வெளியே வந்த இருவரும் திருப்பூர் கோவில் வழி பகுதியில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்காக திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு அசோக், சந்திரசேகர் மற்றும் அவரது நண்பர் கோகுல் என மூன்று பேரும் இரண்டு இருசக்கர வாகனங்களில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர் இவர்கள் இடையன் கிணறு பகுதி அருகே சென்றபோது இவர்களின் பின்னே காரில் வந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் மோதி கீழே தள்ளி உள்ளனர் மேலும் காரில் இருந்து இறங்கிய கும்பல் மூவரையும் கொலை செய்யும் நோக்கில் துரத்தியதாக கூறப்படுகிறது.
அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் ஓடி ஒளிந்து தப்பிய மூவரும் காவல்துறை அவசர உதவி எண் 100க்கு அழைத்து உதவி கேட்டுள்ளனர் இதனை தொடர்ந்து அருகில் ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து குண்டடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்