பனிப்பொழிவை விரட்ட கொள்ளிடம் சூரிய கதிர்கள்.

திருச்சி மாவட்டம், முசிறி,தொட்டியம், தா.பேட்டை பகுதிகளில் பகுதியில் காலை 8.30 மணிக்கு மேல் நிலவிய கடும் பனிப்பொழிவு காரணமாக சாலையில் செல்லும் வாகனங்களில் செல்லுபவர்கள் முகப்பு விளக்கை ஒளிரச் செய்தவாறு செல்கின்றனர்.

திருச்சி மாவட்டம், முசிறி, அய்யம்பாளையம், ஆமூர், குணசீலம்,
தா.பேட்டை, தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் காவேரி ஆற்றின் கரையை ஒட்டி திருச்சி – நாமக்கல் செல்லும் சாலை அமைந்துள்ளது.
இந்த சாலையிலும்,
அப்பகுதியில் உள்ள வயல்வெளிகளிலும் காலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.காலை 8:30 மணிக்கு மேலும் பனிப்பொழிவு இருந்ததால் பள்ளி மாணவ மாணவிகள் பனிமூட்டத்தை பொருட்படுத்தாமல் பள்ளிக்கு விரைந்து சென்றனர். சாலையின் எதிரே வருபவர்கள் தெரியாத அளவிற்கு மேக கூட்டம் போல் பனி காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரச் செய்தவாறு சாலைகளில் பயணிக்கின்றனர்.காலை 8.30 மணி ஆன நிலையிலும் கூட இந்த பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில்
மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே பாடல் வரிகளுக்கு ஏற்ப சூரியன் தனது செந்நிற கதிர்களை விரித்து பனிப்பொழிவை விரட்டி அடிக்கும் வகையில் உதயமாகும் காட்சியும் கண்ணுக்கு விருந்தாக அமைந்திருந்தது.