
பேரூரில் நொய்யல் ஆற்றங்கரை அருகே இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலத்தில் நல்லறம் அறக்கட்டளை சார்பில் கடந்த 2020-ல் தர்பண மண்டபம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டது.
ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தர்பண மண்டப கட்டுமான பணிகள் நிறைவடைந்தது.
இதையடுத்து இன்று தர்பண மண்டபத்தை நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.அன்பரசன், மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைத்தனர்.