திருப்பூர் தாராபுரம் சாலையில் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவர் துணிகளுக்கு சாயம் ஏற்றும் பெயிண்ட் மற்றும் கெமிக்கல் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
துணிகளுக்கு நிறமேற்ற தேவையான பெயிண்ட் மற்றும் கெமிக்கல் உள்ளிட்ட வகைகளை பல வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள காலி இடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஸகொட்டகை அமைத்து இருப்பு வைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று மதியம் திடீரென அங்கு தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளதுஹஸகிடங்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வெளியேறிய நிலையில் கெமிக்கல் வைக்கப்பட்டிருந்த இடம் முழுவதும் மளமளவென தீப்பிடித்து எறிய தொடங்கியுள்ளது
பிளாஸ்டிக் டின்களில் கெமிக்கல் நிரப்பி வைக்கப்பட்டிருந்ததன் காரணமாக வெடிக்கவும் தொடங்கியது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வீரபாண்டி போலீசார் தீ விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து மக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்தில் பத்துக்கு மேற்பட்ட தண்ணீர் லாரிகளில் கொண்டுவரப்பட்ட தண்ணீரைக் கொண்ட ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நல்வாய்ப்பாக யாருக்கும் காயமோ அல்லது சேதமோ ஏற்படாத நிலையில் தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.