
தர்மபுர ஆதீனத்திற்கு சொந்தமான மிகவும் பழமையான திருவையாறு ஐயாறப்பர் கோயில் குடமுழுக்கு 12 ஆண்டுக்கு பிறகு நடைபெறுவதையொட்டி
கோபுரங்கள் உள்ளிட்ட ஆலயம் முழுவதும் புனரமைக்கப்பட்டதும்
கடந்த 30 ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது
நாளை காலை 8 ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றதும், 9.30 மணியளவில் விமான கோபுரம் குடமுழுக்கும்,
10 மணியவில் மூலவர் கோபுர குடமுழுக்கும் தர்மபுரம் ஆதீனம் தலைமையில் நடைபெற உள்ளது
12 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் குடமுழுக்கில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளதால் திருவையாறு விழாக்கோலம் பூண்டுள்ளது