திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்த தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் ரயில், பேருந்துகள், இருசக்கர வானங்களில் வந்து செல்கின்றனர்.
மேலும் பல தொழிற்சாலைகள் கார், வேன், சரக்கு வானங்களில் தொழிலாளர்கள் வேலைக்கு வந்து செல்கின்றனர். இன்று காலை வழக்கம் போல 6பெண் தொழிலாளர்களை ஏற்றி கொண்டு சிறிய சரக்கு வாகனம் ஒன்று கும்மிடிப்பூண்டிக்கு சென்று கொண்டிருந்தது. கவரைப்பேட்டையை கடந்து பன்பாக்கம் பகுதியில் சென்ற போது முன்னால் சென்ற டேங்கர் லாரி திடீரென திரும்பியதால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சிறிய சரக்கும் வாகனம் டேங்கர் லாரி மீது மோதி சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் பயணித்த 6பெண் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் என 7பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து டேங்கர் லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.