சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே சந்திப்பில் இன்று மதியம் 12 மணிக்கு சங்கமித்ரா ஓடும் ரயிலில் ஏற முயன்ற வெஸ்ட் பெங்கால் மாநிலத்தைச் சேர்ந்த உப்லவ் மேத்தா (45) என்பவர் நடைமேடைக்கும் பெட்டிக்கும் இடையே சிக்கிக் கொண்டுள்ளார்.

இதனை கவனித்த ரயில்வே தலைமை காவலர் செல்வகுமார் துரிதமாக செயல்பட்டு ரயிலில் சிக்கிக் கொண்டு தவித்த உப்லவ் மேத்தாவை உடனடியாக மீட்டார்.
இதில் காலில் காயம் ஏற்பட்ட பயணியை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ரயில்வே தலைமை காவலர் செல்வகுமார் தாதுரியமாக விரைந்து செயல்பட்டதால் ஒரு நபரின் உயிரை காக்க நேர்ந்தது இதனை கவனித்த சக பயணிகளும் ரயில்வே காவல்துறையினரும் அதிகாரிகளும் அவரை பாராட்டி உள்ளனர்.