கோபிச்செட்டிப்பாளையம் கிராம மக்கள் ஆதார் அட்டைகளை தலைமை செயலகத்திற்கு அனுப்பும் போராட்டம்.

கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையை காப்பாற்ற வலியுறுத்தி 10 கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 4 வது நாளாக கோபி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் இன்று தமிழக முதல்வருக்கு அஞ்சல் மூலம் ஆதார் அட்டைகளை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனிநபரின் விவசாய நிலங்களுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல்துறை பாதுகாப்புடன் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் குண்டேரிப்பள்ளம் அணையை காப்பாற்ற வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.