ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் மலைப்பகுதியில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை யானை ஒன்று தினமும் அவ்வழியாக வரும் கருமபு லாரிகளை வழிமறித்து, அதனை உண்பதற்காக, லாரிகளை நிறுத்துவது வாடிக்கையாகி உள்ளது.
இந்நிலையில் இன்று காலை கரும்பு உள்ளதா என அவ்வழியாக வந்த லாரி ஒன்றை, நடுரோட்டில் நிறுத்தி, வேகமாக வந்ததால் மற்ற வாகனங்கள் அனைத்தும் சுமார் 10 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. லாரி ஓட்டுநர்களை அச்சுறுத்தும் விதமாக இந்த யானை வழிமறித்து நிறுத்தி சோதனை இடுவதால் அவ்வழியாக செல்லும் மற்ற வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர.
வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டு அந்த ஒற்றை காட்டு யானையை வனத்திற்குள் விரட்ட வேண்டுகோள் விடுத்துள்ளனர்.