பிப்ரவரி மார்ச் இரண்டு மாத காலத்திற்கு பூங்காவிற்குள் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை

கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக இரவிகுளம் தேசிய பூங்காவில் வரையாடுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் இரவிகுளம் தேசிய பூங்கா செயல்பட்டு வருகிறது இங்குள்ள தட்பவெட்ப நிலை மற்றும் இயற்கையான நிலப்பரப்பு காரணமாக ஏராளமான வரையாடுகள் வசித்து வருகிறது இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படும் இந்த வரையாடுகள் அழிந்து வரும் பட்டியலில் உள்ளது எனவே இதை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழகம் மற்றும் கேரள அரசுகள் மேற்கொண்டு வருகிறது

அந்த வகையில் இந்த பூங்காவில் வரையாடுகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது இந்த வரையாடுகளை பார்ப்பதற்கும் பூங்காவை பார்வையிடுவதற்கும்

தமிழகம் கேரளா கர்நாடகா ஆந்திரா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கிறார்கள்

தற்போது இரவிகுளம் தேசிய பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வரும் வரை ஆடுகள்

இனப்பெருக்க காலம் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது இந்த காலகட்டத்தில் இந்த ஆடுகள் குட்டிகளையும் ஈன்றெடுக்கும் காலமாகும்

எனவே இந்த இரண்டு மாத காலங்கள் பிப்ரவரி 1 முதல் மார்ச் 31 வரை பூங்கா மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் பூங்காவிற்குள் அனுமதி இல்லை

2024 கடந்த மே மாதம் நடத்தப்பட்ட வரையாடுகளின் கணக்கெடுப்பில், இரவிகுளம் உட்பட, இந்தப் பகுதிகளில் மொத்தம் 827 வரையாடுகள் காணப்பட்டன.

இவற்றில் 144 புதிய குட்டிகள் ஆகும்

இரவிகுளம் தேசிய பூங்கா மூணாறுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இரவிகுளம் பூங்காவில் சராசரியாக, தினமும் 2500க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தருகின்றனர்.

கடந்த 10 மாதங்களில், இரவிகுளம் தேசிய பூங்காவின் வருமானம் ரூ. 20 கோடியாக உள்ளது

தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை காரணமாக வரையாடுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவது வனத்துறையினரையும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கப்படுகிறது.