
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான முதல்நிலை பணி ஒதுக்கீடு (First Randomization of Counting Officials) செய்தார்.
பிப்ரவரி 5.ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் பிப்ரவரி 8.ம் தேதி நடைபெறவுள்ளது.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு, இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது..
வாக்கு எண்ணும் பணி 14 மேசைகளில் எண்ணப்படவுள்ளது. இப்பணிக்கு 20 சதவீதம் கூடுதலாக (ரிசர்வ்) கணக்கிட்டு 17 கண்காணிப்பாளர்கள், 17 உதவியாளர்கள், 17 நுண் பார்வையாளர்கள் என 51 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்…