
சென்னை தாம்பரத்தில் இருந்து குமரி மாவட்டம் நாகர்கோவில் நோக்கி வந்த
தாம்பரம் – நாகர்கோயில் ரயில் இன்று நாகர்கோயில் ரயில் நிலையம் வந்தது. பின்னர் அந்த ரயில் பராமரிப்பு பணிக்காக கன்னியாகுமரி ரயில் நிலையத்திற்கு அந்த ரயில் கொண்டு செல்ப்பட்டது.அப்பொழுது கன்னியாகுமரி ரயில்வே போலிஸார் அந்த ரயிலில் உள்ள பெட்டிகளில் தங்களது வழக்கமான சோதனையை மேற்கொண்டார்கள்.
அப்பொழுது ரயிலில் உள்ள ஒரு குளிர்சாதன பெட்டியில் இருக்கையில் அனாதையாக ஒரு கைப்பை இருந்ததை கன்னியாகுமரி ரயில்வே போலிஸார் பார்த்து அதனை கண்டெடுத்தார்கள். பின்னர் அந்த பையை திறந்து பார்த்த பொழுது அதில் 40 கிராம் எடையுடைய தங்க செயின் ஒன்று,மூன்று மோதிரங்கள்,தங்க நாணயம் ஒன்று,மற்றும் கம்மல் நான்கு ,ஒரு வைர மூக்குத்தி ஆகியவை இருப்பது தெரிந்தது.இதன் மதிப்பு 3,50,000 ரூபாய் எனவும் தெரிய வந்தது.
இதனை அடுத்து கைப்பையை தவற விட்ட ரயில் பயணி குறித்த விசாரனையில் ஈடுப்பட்ட கன்னியாகுமரி ரயிவே போலிஸார் அந்த கைபையை தவற விட்டது திருவள்ளூர் மாவட்டம் நொலம்பூர் பகுதியை சேர்ந்த சேகர்( 60) என கண்டு பிடித்தார்கள்.இதனை தொடர்ந்து தங்க நகைகள் இருந்த பையின் உரிமையாளரை வரவழைத்து அவரிடம் தீவிர விசாரனை நடத்திய பின்பு கன்னியாகுமரி ரயில்வே போலிஸார் தங்க நகைகள் இருந்த கைப்பையை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்கள்.