திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் சினேகா 23 வயதானவர் கல்லூரி படிப்பை முடித்து தனது தாயாருடன் திருப்பூர் சத்யா காலனி பகுதியில் குடியிருந்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திருவண்ணாமலையைச் சேர்ந்த தீபக் என்ற 19 வயது இளைஞர் அறிமுகமாகியுள்ளார்.

கோவை தனியார் கல்லூரியில் ரோபாட்டிக் இன்ஜினியரிங் பயின்று வரும் தீபக் சினேகாவுடன் நீண்ட நாட்களாக பழகி வந்துள்ளார் மேலும் அவ்வப்போது திருப்பூர் வந்து சினேகாவை பார்த்துவிட்டும் சென்றுள்ளார். மேலும் சினேகாவை காதலிக்குமாறு தொடர்ந்து தீபக் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. சினேகா வயது வித்தியாசத்தை காரணம் காட்டி தவிர்த்து வந்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த தீபக் இன்று வழக்கம் போல சினேகாவை சந்திக்க வந்தபோது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சினேகாவின் கழுத்து கை இடுப்பு என மூன்று இடங்களில் அறுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பெண்ணின் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்குச் சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் தூக்கில் சடலமாக இருந்த தீபக் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் காயமடைந்து இருந்த சினேகாவை திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.