தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்தும், ஒன்றிய அரசின் ஏஜெண்ட்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்து திருப்பூர் வடக்கு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் குமரன் சிலை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட திமுக அவைத்தலைவர் நடராஜன் தலைமை வகித்தார் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டு ஆளுநரை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.