முசிறி அருகே வறுமை காரணமாக சித்த மருத்துவ படிப்பை தொடர இயலாமல் சிரமப்படும் மாணவி – தமிழக முதல்வர், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் கருணை உள்ளம் கொண்டோர் உதவிட மாணவி கோரிக்கை.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே நீட்தேர்வில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு பதிலாக சித்தா மருத்துவர் படிப்பிற்கு தனியார் கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்த நிலையில் வறுமை நிலை காரணமாக சிரமப்படும் மாணவி தமிழக முதல்வர் மற்றும் கல்வி அலுவலர்கள் உதவிட கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி மாவட்டம் | முசிறி அருகே உள்ள வேளகாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அழகுமுத்து வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு விமலா (18) என்ற மகள் உள்ளார். விமலா 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தண்டலைபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். 12 ஆம் வகுப்பு படித்த நிலையில் மருத்துவராக வேண்டும் என்ற தனது கனவை தச்சு வேலை செய்யும் கூலி தொழிலாளிகளான தந்தையிடமும், தாயிடமும் கூறியுள்ளார். நீட் தேர்விற்கு பயிற்சி வகுப்பிற்கு அனுப்பிட வசதி இல்லாத நிலையில் தாய் லலிதா கடன் வாங்கி மூன்று மாத காலம் தனியார் நீட் பயிற்சி வகுப்பிற்கு விமலாவை அனுப்பி உள்ளார். 2024 நீட் தேர்வில் விமலா 316 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. இந்நிலையில் மாணவி விமலாவிற்கு சித்த மருத்துவ படிப்பு படிப்பதற்காக கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. மாணவி விமலா தாய் லலிதாவிடம் எம்பிபிஎஸ் படிப்பு கனவு நிறைவேற விட்டாலும் பரவாயில்லை. சித்த மருத்துவர் ஆகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இயற்கையாகவே மூலிகைகள் மீது ஆர்வம் கொண்ட விமலா சித்த மருத்துவ படிப்பு படிக்க வைக்க வேண்டும் என கெஞ்சியுள்ளார்.
இதையடுத்து மகளின் மருத்துவர் கனவை நிறைவேற்ற விமலா விடுமுறை தினங்களில் டைலர் கடையில் வேலை பார்த்து சேமித்து வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் மற்றும் கை செலவுக்கு தெரிந்த நபர்களிடம் கடன் வாங்கிக்கொண்டு மகள் விமலாவை அழைத்துகொண்டு கன்னியாகுமரி தனியார் சித்த மருத்துவக் கல்லூரிக்கு நேரில் சென்றுள்ளார். குறித்த தேதிக்குள் அட்மிஷன் போட வேண்டும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளனர். மேலும் வருடத்திற்கு சுமார் இரண்டே கால் லட்சம் ரூபாய் செலவு ஆகும் என அறிந்த மாணவி விமலாவும் அவர் தாய் லலிதாவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வறிய நிலையில் இருக்கும் சூழலில் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினாலும்,
மருத்துவர் ஆக வேண்டும் வேட்கையினாலும் வேலை பார்த்து சேமித்த பணம் 10 ஆயிரத்தைக் கொண்டு அட்மிஷன் போட்டு வந்துள்ளனர். ஆனால் தொடர்ந்து முதலாம் ஆண்டு சித்த மருத்தும் கல்லூரியில் சேர்ந்து படிப்பை தொடர்வதற்கு வழி இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார். கல்லூரியில் வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில் நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி பெற்று பொருளாதார தேவைக்காக மாணவி உதவி கேட்டு சிரமப்பட்டு வருகிறார்.
இதுகுறித்து மாணவி விமலா கூறும்போது எம்பிபிஎஸ் மருத்துவராக வேண்டும் என விரும்பினேன். ஆனால் சித்த மருத்துவர் படிப்பிற்கு இடம் கிடைத்துள்ளது. ஆர்வத்தில் அட்மிஷன் போட்டு வந்து விட்டேன். ஆனால் விடுதியில் தங்கி படிக்கவும், கல்லூரிக்கான கட்டணம் செலுத்தவும் என்ன செய்வது என்று புரியவில்லை.
தமிழக முதல்வர் மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர்கள்
கே.என்.நேரு, அன்பில் மகேஷ்பொய்யா
மொழி மற்றும் உதவும் சிந்தனை உள்ளவர்கள் நான் சித்த மருத்துவ படிப்பை முடிப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறினார். தமிழக முதல்வரும் உதவும் சிந்தனை கொண்டு வரும் மாணவிக்கு உதவினால் அவரின் சித்த மருத்துவ கனவு நனவாகும்.