மகளிர் அணி செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் விழா ஆனைமலை கிழக்கு ஒன்றியம் தாய் அன்பாலயத்தில் கோவை தெற்கு மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணிகளின் சார்பாக விழா சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவிற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமை வகித்தார் மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் கவிதா பிரசாத் அவர்கள் முன்னிலை வகித்தார் மாவட்ட திமுக செயலாளர் திரு தளபதி முருகேசன் அவர்கள் கலந்து கொண்டு ஏழை குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு வழங்கினார் மேலும் இவ்விழாவில் மாவட்ட மகளிர் அணி தலைவர் கமலம், ஊராட்சி மன்ற தலைவர் திருஞான சம்பந்தம், ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி சரஸ்கலா செந்தில் ஒன்றிய பிரதிநிதி திரு ரவி பாஸ்கர் மற்றும் துணை அமைப்பாளர்கள், வலைத்தள பொறுப்பாளர்கள், உள்ளிட்ட கழக முன்னணியனர் உடன் , அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கியும், மதிய உணவு வழங்கியும் விழா இனிதே நடைபெற்றது.